தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக டாப் இடத்திலிருந்து வந்த நடிகர் விஜய் தற்போது சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக இவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை துவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
அண்மையில் தான் இக்கட்சியின் கொடியை தன்னுடைய தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்து அரசியலில் இன்னொரு படி எடுத்து வைத்திருக்கிறார். இந்தக் கொடியில் சிவப்பு மஞ்சள் நிறங்களுடன் இரண்டு போர் யானைகள் பிளிரும் வகையில் அதற்கு நடுவில் வாகை மலர் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த கொடிக்கான விளக்கத்தை வருகிற மாநாட்டில் நான் விளக்கமாக கூறுகிறேன் என விஜய் கூறியிருந்தார். இதை அடுத்து இந்த கொடிக்கான விளக்கம் சங்க கால அரசியலும் அதன் வெற்றிகளையும் விவரிப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஆளும் கட்சி முதல் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆம், அந்த அளவுக்கு அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆதரவாக இருக்கிறார்கள்., இந்த நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல காமெடி நடிகரும் ஆன கருணாசிடம் எம்ஜிஆர் உடன் விஜய்யை ஒப்பிட்டு பேசுகிறார்கள். இதை எப்படி நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு… அந்த கால அரசியல் வேறு. இப்பொழுது உள்ள அரசியல் வேறு.
விஜய் நினைக்கும் அரசியல் என்பது அவ்வளவு எளிதல்ல. அடுத்த எம்ஜிஆர் விஜய் என கூறுகிறார்கள். விஜய் விஜய் எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். அப்போது ஆரம்ப காலகட்டங்களில் எம்ஜிஆர் அரசியலில் புகுந்த போது அவருக்கு வரும் கூட்டம் போலவே இப்போது விஜய்க்கு வருகிறது எனவே கண்டிப்பாக விஜய் அடுத்த எம் ஜி ஆர் எனக் கூறுவதெல்லாம் முட்டாள்தனம்.
இதே போல் தான் நடிகர் வடிவேலு அரசியல் பிரச்சாரத்திற்கு முதல் முதலாக போகும்போது எக்கச்சக்கமான கூட்டம் கூடியது. ஆனால் அந்த கூட்டம் கூடிய வேகத்தில் ஓட்டம் பிடித்து விட்டது. காரணம் நடிகராகிய வடிவேலுவை நேரில் பார்க்க தான் அந்த கூட்டம் கூடியதே தவிர கூட்டத்தை நம்பி ஓட்டு வந்துவிடும் என நினைத்து விடக்கூடாது. எனவே விஜய் ஒரு மாஸ் நடிகராக இருக்கிறாரே தவிர அவரை பார்ப்பதற்காக தான் கூட்டம் கூடும்.
அது ஓட்டாக மாறுமா என்றால் அது சந்தேகம் தான் என கருணாஸ் தெளிவான விளக்கத்துடன் தன்னுடைய விமர்சனத்தை கூறி இருக்கிறார். இதனை பலர் விஜய் மேல் இருக்கும் காண்டில் தான் கருணாஸ் இப்படி பேசுகிறார் என கூறினாலும் அவர் கூறுவது ஒரு விதத்தில் நிதர்சனமான உண்மை என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.