விருது வழங்கும் விழாவில் கண்கலங்கிய விஜய்… மாற்றுத்திறனாளி மாணவர் செய்த நெகிழ்ச்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2023, 2:31 pm

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அத்துடன் கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு சில இடங்களில் அந்த மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றி அடைந்தனர்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை வழங்குகிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.

அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார். இன்று காலை 7:30 மணி முதலே மாணவர்களும் பெற்றோர்களும் மண்டபத்திற்கு வருகை தரத்தொடங்கினர்.

இந்த நிலையில் வீட்டிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள விழா அரங்கத்துக்கு வந்துகொண்டிருந்தபோது அவரது காரை ரசிகர்கள் சூழந்துகொண்டனர். ரசிகர்கள் அன்பில் மிதந்து வந்த விஜய் ஒரு வழியாக விழா அரங்கத்துக்கு வந்து சேர்ந்தார்.

அப்போது விஜய் அருகில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் விஜய்க்கு ஒரு ஓவியத்தை பரிசாக வழங்கினார். அதனை பார்த்த விஜய் நெகிழ்ச்சியில் கண்கலங்கினார்.

  • Ajith screamed after Vijay's dialogue.. INTERVAL scene from GOOD BAD UGLY leaked விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!