படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா- சமந்தாவுக்கு காயம்.? படக்குழு அளித்த விளக்கம் என்ன.?

Author: Rajesh
24 May 2022, 1:43 pm

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்து வரும் திரைப்படம் தான் குஷி . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. காஷ்மீரில் இயற்கை அழகுடன் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா சம்பந்தப்பட்ட பல முக்கியமான காட்சிகள் இயற்கை அழகுடன் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, விபத்து ஏற்பட்டதாகவும், இருவருக்கும் எந்த ஒரு காயமில்லை என்றும் இணையத்தில் செய்திகள் வேகமாக பரவின். இந்த நிலையில் இந்த செய்தியை படக்குழு மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘இந்தச் செய்தியில் உண்மை இல்லை. காஷ்மீரில் 30 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு நேற்று ஒட்டுமொத்த படக்குழுவும் ஹைதராபாத் திரும்பினர். இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது. தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று படக்குழு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 637

    1

    0