G.O.A.T படம் பார்க்க கேரளா சென்ற விஜய் ரசிகர்.. 3000 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையானதால் ஷாக்!.

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2024, 12:33 pm

நடிகர் விஜய்யின் 68வது படமாக கோட் படம் சர்வதேச அளவில் நாளைய தினம் ரிலீசாகவுள்ளது. சிறப்பு காட்சிகளுடன் பல மாநிலங்களிலும் ரசிகர்கள் இந்தப் படத்திற்காக காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு விஜய்யின் முந்தைய படங்களை போல ஹைப் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது அதிகப்படியான டிக்கெட்டுகள் ப்ரீ புக்கிங்கில் விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்த டிக்கெட் சேல்சே இந்தப் படத்திற்கான ஹைப்பை வெளிப்படுததியுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு உற்சாகமாக தெரிவித்துள்ளார்.இந்தப் படத்தில் விஜய்யுடன் முன்னணி ஹீரோக்களான பிரஷாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளது படத்திற்கான உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது.வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள கோட் படம் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ளது.

படத்தின் பட்ஜெட் விஜய்யின் சம்பளத்துடன் சேர்ந்து 400 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது. விஜய்யின் சம்பளம் மட்டுமே 200 கோடி ரூபாய் என்றும் தயாரிப்புத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுபிராட்வே சினிமாஸில் காலை 7 மணிக்கும் , மற்ற தியேட்டர்களில் காலை 9 மணிக்கும் திரையிடப்பட்டது.

கோவை மாவட்டத்திற்கு அருகே இருக்கும்,பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையிலுள்ள கெளமாலையா தியேட்டரில் கோட் படம் காலை 4 மணிக்கு திரையிட்டனர்.

தமிழகத்தில் இருந்து விஜய் ரசிகர்கள் 1200 ரூபாய் முதல் 2000 வரை ஒரு டிக்கெட்டிற்கு விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதனால் உள்ளூர் வாசிகளுக்கு படம் பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.தியேட்டரின் உரிமையாளரே ஒரு டிக்கெட்டின் விலையை 1200 ரூபாய் முதல் 2000 வரை விற்ப்பதாகவும், கேரள ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.முதல் நாள், முதல் காட்சியிலேயே விஜய் படம் பார்க்க, தியேட்டருக்கு வெளியே ரசிகர்கள் ஒரு டிக்கெட்டை 3000 ரூபாய்க்கு, விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதை தடுக்க, கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும்,தமிழகத்தை ஒட்டி இருக்கும் கேரள மாநிலத்திலுள்ள தியேட்டர்களில் கோட் படத்திற்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதை தடுக்க, தமிழகத்திலேயே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென கேரள ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

  • Veera Dheera Sooran Box Office Collection இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!