விஜய்யை அவர் இவர்னு எல்லாம் கூப்பிட முடியாது : பிக் பாஸ் நடிகை பேச்சால் கோபத்தில் விஜய் ரசிகர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan2 February 2022, 11:20 am
சினிமா கேரியரில் என்ட்ரி ஆகும் நடிகைகள் சோபித்து போகவில்லையென்றால் மூட்டை முடிச்சுகளை கட்டி சென்றுவிடுவர். சிலர் திருமணம் செய்து செட்டிலாகி விட்டு மீண்டும் நடிக்க துவங்குவர்.
அந்த வகையில் வந்த ஹீரோயின் தான் வனிதா விஜயகுமார். வாரிசு நடிகையாக இருந்தாலும், இவருக்கு சினிமா உலகம் கைக்கொடுக்கவில்லை. அதே சமயம் இவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சர்ச்சையால் நெட்டிசன்கள் இன்னும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
பிக் பாஸ் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு சினிமாவில் வலம் வரும் வனிதா, பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியால் விஜய் ரசிகர்கள் கோபத்தில் உள்னர்.
ஆரம்பத்தில் விஜய்யுடன் இவர் நடித்த திரைப்படம் சந்திரலேகா. அந்த படத்தில் நடித்த போதில் இருந்தே விஜய்யை நான் அவர் இவர் என்று கூப்பிட்டது கிடையாது என கூறும் வனிதா, மாரியாதையுடன் பேசுவதாக நினைத்து மாற்றி பேச முடியாது, ஆரம்பத்தில் இருந்து விஜய்னு தா கூப்பிடுவே.. இனிமேலும் அப்படிதா கூப்பிடுவே என கறாராக கூறியுள்ளார்.
வனிதாவின் பேச்சுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் கருத்துக்களை விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் வனிதா மீது விஜய் ரசிகர்கள் செம கோபத்தில் உள்ளார்கள்.