‘பீஸ்ட்’ஐ வெறித்தனமாக கொண்டாடிய ரசிகர்கள்: திரையை கிழித்து அதகளம்..!!

Author: Rajesh
13 April 2022, 9:48 pm

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில் திரை கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் கார்த்திகை , ஸ்ரீ வள்ளி திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இதில் திருவனந்தபுரம் செல்லும் சாலையில் உள்ள வசந்தம் பேலஸ் என்னும் திரையரங்கில் திரைப்படம் துவங்கும் முன்னர் ரசிகர்களின் ஆர்வமிகுதியால் பல்வேறு கொண்டாட்டங்களில் திரை முன்பு ஈடுபட்டனர் .

உற்சாகத்தில் உச்சமாக ஆடிங்கொண்டிருந்த ரசிகர்கள் திரையின் மேல் விழுந்தனர். இதில் திரை கிழிந்தது. பின்னர் படம் முழுவதும் ஓடிய பின்னர் திரை சரி செய்யப்பட்டு காட்சிகள் நடந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, விஷமிகள் சிலர் ரசிகர்கள் போர்வையில் திரையரங்கில் நுழைந்து திரையை கிழித்து இருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!