கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில் திரை கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் கார்த்திகை , ஸ்ரீ வள்ளி திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இதில் திருவனந்தபுரம் செல்லும் சாலையில் உள்ள வசந்தம் பேலஸ் என்னும் திரையரங்கில் திரைப்படம் துவங்கும் முன்னர் ரசிகர்களின் ஆர்வமிகுதியால் பல்வேறு கொண்டாட்டங்களில் திரை முன்பு ஈடுபட்டனர் .
உற்சாகத்தில் உச்சமாக ஆடிங்கொண்டிருந்த ரசிகர்கள் திரையின் மேல் விழுந்தனர். இதில் திரை கிழிந்தது. பின்னர் படம் முழுவதும் ஓடிய பின்னர் திரை சரி செய்யப்பட்டு காட்சிகள் நடந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, விஷமிகள் சிலர் ரசிகர்கள் போர்வையில் திரையரங்கில் நுழைந்து திரையை கிழித்து இருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.
NEEK Vs DRAGAN நடிகர் தனுஷ் இயக்கி தயாரித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் கடந்த 21ஆம்…
கேம் சேஞ்சர் படத்தில் 350 துணை நடிகர்களுக்கான சம்பளம் கொடுக்காமல் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னை: பிரமாண்ட் இயக்குநராக…
நல்ல நண்பர்களாக வலம் வந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது கோர்ட்டில் கேஸ் நடத்தும்…
தினம்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டன் கைது செய்யப்பட்டு கொண்டு இருக்கிறான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
கயாடு போன் மீமை பார்த்து கலாய்த்த பிரதீப் ட்ராகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கயாடு லோஹர் தனக்குத்தானே மீம்ஸ் போட்டுகொண்டுள்ளார்,இந்த…
This website uses cookies.