என்னுடைய உச்சம்.. உனக்கு ஏன் அச்சம் : ரஜினியை சீண்டிய விஜய் ரசிகர்கள்… போஸ்டரால் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2023, 11:52 am

மதுரையில் ரஜினியை சீண்டி விஜய் ரசிகர்கள் ஒட்டிய நோட்டீஸ்களால் பரபரப்பு

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான், ஆனால் சமீப கலாமாகவே இந்த பட்டத்துக்கு நடிகர் விஜய் போட்டி போட்டு வருவதாகவும், அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

இந்த சர்ச்சைக்கு இடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜெயிலர் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், கழுகு காகம் என குட்டி கதை கூறிய ரஜினி விஜயை தான் காகம் என கூறுகிறார் என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது மதுரையில் விஜய் ரசிகர்கள் ரஜினிக்கு சவால் விடும் வகையில் என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம் என்ற வசனத்தோடு ரஜினி மற்றும் விஜய் படங்களை அச்சிட்டு ஒட்டிய நோட்டீஸ்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி