டெய்லி விஜய்க்கு வீடியோ அனுப்புவேன்.. நிறைவுற்ற விஜயின் விருந்து உபசரிப்பு விழா!

Author: Hariharasudhan
23 November 2024, 5:54 pm

தவெக மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இன்று அதன் தலைவர் விஜய், கட்சி அலுவலகத்தில் விருந்து வைத்தார்.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள விஜய், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலை கிராமத்தில் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தினர். இந்த மாநாடு கிட்டத்தட்ட 85 ஏக்கர் நிலத்தில் நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இவ்வாறு மாநாட்டுக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை கெளரவிக்கும் விதமாக, அவர்களை நேரில் வரவழைத்து விருந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதற்காக, இன்று பிற்பகல், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு விஜய் வந்தார். பின்னர், அங்கு நின்று கொண்டிருந்த தொண்டர்களுக்கு கை அசைத்த விஜய், பின்னர் உள்ளே சென்றார்.

அங்கு, நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து, தானே உணவு பரிமாறினார். பின்னர், சில நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு தங்க மோதிரத்தை விஜய் பரிசாக அளித்து உள்ளார். மேலும், இந்த நிகழ்வில் 47 விவசாயிகள் கெளரவிக்கப்பட்டதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறினார்.

TVK Vijay gifted Gold ring

இதனைத் தொடர்ந்து, விஜயிடன் தங்க மோதிரத்தை பரிசாகப் பெற்ற பந்தல் அமைப்பாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களின் பாதுகாப்பே தலைவருக்கு (விஜய்) முக்கியமானது. அதற்காகவே அவர் என்னை மிகவும் கேட்டுக் கொண்டார். மாநாட்டுத் திடல் அமைக்கும்போது தினமும் வீடியோக்களை நாங்கள் விஜய்க்கு அனுப்புவோம். அவர், அதில் குறை நிறைகளைக் கூறுவார். அதனை நாங்கள் சரிசெய்வோம். என்னுடைய பணி அவருக்கு பிடித்திருந்ததாகக் கூறியது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதையும் படிங்க: 4 வருஷமா எங்களுக்குள்ள ஒன்னுமில்ல.. சந்தையில் புடவையில் கணவர்.. அதிர்ந்த மனைவி

இப்போது என்னிடம் சுமார் 10 நிமிடங்கள் விஜய் பேசி இருப்பார். அதுவே எனக்கு போதும். மோதிரம் கொடுப்பதாக எங்களிடம் அவர்கள் கூறவில்லை. உங்களைப் பார்க்க வேண்டும், கட்சி அலுவலகம் வாருங்கள் என்று தான் அழைப்பு வந்தது. எனவே, நாங்கள் குடும்பத்துடன் வந்தோம்” எனக் கூறினார். தொடர்ந்து, விஜய் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 85

    0

    0