விஜய் நடிப்பில் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் படம் வாரிசு. வம்சி பைடிபல்லி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் ரிலீஸாக இருக்கிறது.
இரண்டு பெரிய படங்களும் நேருக்கு நேர் மோத இருக்கும் நிலையில், வாரிசுக்கு ஆரம்பத்திலேயே சிக்கல்கள் எழத் தொடங்கியிருக்கிறது. தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் பொங்கலன்று வாரிசு படத்தை தெலுங்கில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் துணிவு படத்தின் தியேட்டர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியிருப்பதால், அந்தப் படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இரண்டு பெரிய பிரச்சனைகளையும் விஜய் இப்போது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால், திடீரென பனையூரில் ரசிகர்களை சந்தித்திருக்கிறார் விஜய்.
தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ரசிகர்களை நேரில் சந்தித்த அவர், வாரிசு படத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதை கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வாரிசு படத்துக்கு சிக்கல்கள் ஏற்படுத்துவோருக்கு மறைமுகமாக தனக்கிருக்கும் ரசிகர்களை பலத்தை காட்டுவதற்காகவும் இந்த முயற்சியை விஜய் எடுத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இது குறித்து சினிமா ஆர்வலர்கள் பேசும்போது, விஜய் போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் தங்கள் படங்களுக்கு பிரச்சனை வரும்போது மட்டுமே ரசிகர்கள் கண்ணுக்கு தெரிவார்கள்.
மற்ற நேரங்களில் அவர்களை துளியும் மதிக்க மாட்டார்கள் என விமர்சித்துள்ளனர். வாரிசு படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அவர் ரசிகர்களை சந்தித்து இருப்பதாகவும் சாடியுள்ளனர்.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.