2026ல் கப்பு முக்கியம் பிகிலு… தேர்தலை குறி வைத்த விஜய் : குடைச்சல் கொடுக்க அரசியல் கட்சிகள் ரெடி!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2023, 10:19 am

2026ல் கப்பு முக்கியம் பிகிலு… தேர்தலை குறி வைத்த விஜய் : குடைச்சல் கொடுக்க அரசியல் கட்சிகள் ரெடி!

‘மாஸ்டர்’ திரைப்படத்துக்கு பிறகு நடிகர் விஜயும், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சேர்ந்த 2வது படம் ‛லியோ’. இந்த படத்தில் விஜய், த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே கடந்த மாதம் அக்டோபர் 19ல் தியேட்டர்களில் வெளியானது. இந்த திரைப்படம் என்பது கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளனர்.

கடந்த 12 நாட்கள் முடிவில் ரூ.540 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடந்து முடிந்தது.

இந்த விழாவுக்கு ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளி வரும் நிலையில் இவரது பேச்சு அதிகம் கவனிக்கப்பட்டது.

இந்த விழாவில் நடிகர் விஜய், ‛‛நான் ரெடி.. வரவா.. ” எனும் பாடல் மூலம் உரையை தொடங்கினார். விஜய் பேச தொடங்கியதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் நிகழ்ச்சி களைக்கட்டியது. இதையடுத்து நடிகர் விஜய் பேசினார். அப்போது பல சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதுதொடர்பாக நடிகர் விஜய் பேசியதாவது: ‛‛மக்கள் தான் மன்னர்கள், நான் உங்கள் தளபதி, நங்கள் ஆணையிட்டால் நான் செய்யத்தயார். சினிமாவில் புரட்சி தலைவர், நடிகர் திலகம், உலக நாயகன், சூப்பர் ஸ்டார், தல என ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டம் உள்ளது.

இந்த பட்டம் என்பது அவர்களுக்கு தான் சொந்தம். வலைதளங்களில் ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள். நமக்கு அதிகம் வேலை உள்ளது. மக்கள் பிடித்தால் தட்டிக்கொடுப்பார்கள். பிடிக்க வில்லை என்றால் தட்டி விட்டு விடுவார்கள்” என பேசினார். மேலும் அவர் வழக்கம்போல் குட்டிக்கதையும் தெரிவித்துள்ளார். இந்த வேளையில் தொகுப்பாளர்கள் நடிகர் விஜயிடம் கேள்விகள் கேட்டனர். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்வியை கேட்ட நடிகர் விஜய் முதலில் மழுப்பலாக பதிலளித்தார். அதன்பிறகு அவர் ரசிகர்களை பார்த்து , ‛‛..கப்பு முக்கியம்’ பிகிலு.. அதனை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்” எனக்கூறினார்.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இனி வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை மனதில் வைத்து தான் நடிகர் விஜய் ‛கப்பு முக்கியம் பிகிலு’ என ரசிகர்களை பார்த்து கூறியுள்ளார். இதனால் நடிகர் விஜய் 2026 சட்டசபை தேர்தலில் அவர் கட்சி தொடங்கி அவர் அரசியலில் கால்பதிப்பது உறுதியாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம் அவர் அரசியலுக்கு வருவதால் அவர் படத்திற்கு அரசியல் கட்சிகள் குடைச்சல் கொடுக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 331

    0

    0