இளமையான விஜய்.. படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த புகைப்படம் வைரல்.!

Author: Rajesh
9 June 2022, 6:54 pm

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய், வம்ஷி பைடிபள்ளியுடன் இணைந்து ‘ தளபதி 66 ‘ படத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் ஹைதராபாத்தில் ஒரு பெரிய ஷெட்யூலை முடித்திருந்தனர். இதையடுத்து இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.அந்த செட்டில் இருந்து தற்போது விஜய்யின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், ‘தளபதி 66’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய்யின் படம் சமூக ஊடகங்களில் கசிந்தது.

மேலும் நடிகர் நீல நிற டீ சர்ட், வெளிர் பழுப்பு நிற கோட்டு போன்ற சட்டையுடன் காணப்பட்டார். விஜய்யின் தோற்றம் ‘தலைவா’ படத்தின் தோற்றத்தைப் போலவே இருக்கிறது. ஆனால் இதில் அவர் தாடியுடன் இருக்கிறார். படப்பிடிப்பில் இருந்து அவரது படமும் கசிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, அடுத்த ஷெட்யூலுக்கு முன்பாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

ரஷ்மிகா மந்தனா , பிரகாஷ் ராஜ் , பிரபு, ஜெய சுதா, யோகி பாபு , ஷாம் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!