போர் யானைகளுடன் வாகை மலர்.. தவெக கொடியை அறிமுகம் செய்தார் விஜய்..!

Author: Vignesh
22 August 2024, 9:55 am

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்தார். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள் நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழகத்தின் கொடியை நிர்வாகிகள் தொண்டர்கள் விஜய் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

இதற்காக டெல்லியில், உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து, வெளியிடப்பட்ட அறிக்கை 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு என்றும், விஜய் முன்பே அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து, கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

கட்சி நிர்வாகிகளும், உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், கடந்த 19ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கட்சி கொடியை விஜய் ஏற்றி ஒத்திகை பார்த்தார். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 337

    0

    0