விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!
Author: Udayachandran RadhaKrishnan19 April 2025, 5:44 pm
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன பொதுகூட்டத்தில் இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பு அநீதி என மத்திய அரசுக்கு எதிராக திமுக நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
இதையும் படியுங்க: மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய பள்ளி மாணவன்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்!
அப்போது சிறப்பு பேச்சாளராக பேசிய மணிமாறன் விஜய்க்கு எதிராக பேசும் போது விஜய் 90 காலகட்டங்களில் நடிக்க வரும் போது அவருடைய தந்தை இயக்கத்தில் நடித்தார்.
அப்போது கழிவறையில் சுவரில் ஓட்டை போட்டு நடிகை சங்கவி முதுகில் சோப்பு போடுவது போல ஆபாச காட்சிகள் எடுத்தார். இந்த காட்சியில் விஜய் ஆபாசமாக நடித்தார்.
சங்கவி மட்டும் இல்லாமல் அவர் அம்மாவாக நடித்த ஸ்ரீ பிரியாவிற்க்கு சோப்பு போடுவார். அதேபோல் அந்த படத்தில் தொட்டபெட்டா ரோட்டு மேலே கொத்து புரோட்டா என்ற பாடலை விஜயும் அவரது அம்மாவும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.
குடும்பமே ஆபாச குடும்பம், இது ஒரு ஐட்டம் சாங் இந்த நாகரீகமே இல்லாமல் இதுபோன்று நடித்து விட்டு இவர் நாகரீகம் பற்றி பேசுகிறார் என பரபரப்பாக பேசினார். இந்த பொதுகூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.