PS 1-ல் விஜய்க்கு பிடித்த விஷயம் இதுதானாம்.. பெரிய பழுவேட்டரையர் பகிர்ந்த சுவாரஸ்யமான உண்மை..!

Author: Vignesh
28 September 2022, 9:00 pm

பொன்னியின் செல்வன் படத்தில் விஜய்க்கு பிடித்தது இதுதான் என்று சரத்குமார் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் இப்படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முன்பதிவின் கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து முதல்நாளில் இப்படம் பெரிய வசூலை குவிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் விஜய்க்கு பிடித்த விஷயத்தை குறித்து சரத்குமார் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

சில வாரங்களாகவே பொன்னியின் செல்வன் குறித்த வீடியோக்களும், நடிகர்கள் கொடுத்திருக்கும் பேட்டிகளும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த வகையில் சரத்குமார் அவர்களும் பொன்னியின் செல்வன் படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

அப்போது அவர், பொன்னியின் செல்வன் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த பொன்னி நதி பாடல் தான் தளபதி விஜய்க்கு ரொம்ப பிடிக்கும். அந்த பாடலை தான் அவர் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

அது மட்டும் இல்லாமல் கார்த்திக் நடித்திருக்கும் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.

இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதோடு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் பிசியாக நடிக்கிறார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!