விபச்சார விடுதி நடத்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி… ஸ்பா என்ற பெயரில் நடந்த தில்லு முல்லு… ஷாக் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2023, 9:11 am

திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் ஸ்பா இயங்கி வந்தது. இங்கு பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அங்குள்ள வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தை சேர்ந்த லட்சுமி தேவி என்பவரும் இரண்டு பெண்களும் இருந்தனர். வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்தபோது இந்த ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக நடைபெறுவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அங்கிருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலாளர் லட்சுமி தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான லட்சுமி தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உரிய அனுமதியின்றி ஸ்பா நடத்தியதாக உரிமையாளர் செந்தில் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த ஷைன் ஸ்பாவின் உரிமையாளர் செந்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.

இவர் திருச்சி நகர் பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 680

    0

    0