234 தொகுதிகளில் பசியை போக்கிய விஜய் மக்கள் இயக்கம் : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இலவச மதிய உணவு சேவை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2023, 4:53 pm

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அன்னதானம் செய்வார்கள் என்று இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவை திட்டம் மூலம் இன்று காலை 11 மணி முதல் இலவச உணவு வழங்கப்பட்டது. தமிழக மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாவட்டங்களிலும் மதிய உணவு வழங்க அறிவுறித்தியுள்ளார்.

விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவரும் நகர்மன்ற கவுன்சிலருமான பர்வேஸ் இவற்றை மக்களுக்கு வழங்கினார். சில இடங்களில் பிரியாணியும் வழங்கப்பட்டது, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கினர். இது, நடிகர் விஜய்யின் அரசியல் முன்னோட்டமாகவே இந்த செயல்களை பார்க்க முடிகிறது என விமர்சனங்களும் எழுந்துள்ளது.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 453

    0

    0