திடீரென வீட்டில் திரண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி தீக்காயங்களுடன் உதவி கோரிய பெண்ணுக்கு ஆதரவுக்கரம்!!

Author: Babu Lakshmanan
11 January 2023, 10:05 pm

சென்னை : சென்னையில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்தித்து நிதியுதவி வழங்கினர்.

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து அவருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினர்.

சென்னையில் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்ட இளம்பெண் ஒருவர், உடலில் 60 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு உதவி செய்யுமாறு, நடிகர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்த அந்தப் பெண், அவரை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, இது தொடர்பாக நடிகர் விஜய் அந்த பெண்ணுக்கு உதவி செய்யமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, நடிகர் விஜய் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், வரும் 15-ந்தேதிக்குள் விஜய் அந்த பெண்ணை சந்திக்காவிட்டால், வாரிசு திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளின் வாசலில் நடிகர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழர் முன்னேற்றப் படை கட்சியினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து அவருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினர். மேலும் அவருக்கு தேவைப்படும் உதவிகளை செய்து தருவதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…