விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி … பொறியியல் தர வரிசைப்பட்டியலில் முதலிடம்!!

Author: Babu Lakshmanan
26 June 2023, 3:43 pm

விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா பொறியியல் தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அண்மையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நடிகர் விஜயே தனது கைகளால் சான்றிதழ் மற்றும் ரூ.5000 ஊக்கத்தொகையையும் வழங்கி, புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

சுமார் 13 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சளிக்காமல் சான்றிதழ்களை வழங்கியது பெரும் பேசு பொருளானது.

இதனிடையே, சில மாணவர்கள் மாவட்டத்திலே அதிக மதிப்பெண்கள் எடுத்த நிலையிலும், விஜய் மக்கள் இயக்கம் தங்களை கல்வி விருது விழாவுக்கு அழைக்கவில்லை என்று வேதனை தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்த மாணவி நேத்ராவும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். இவர் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 598 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையிலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் குளறுபடியால் மாணவி நேத்ரா சென்னை அழைத்து வரப்படவில்லை.

இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதில், விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட தூத்துக்குடி மாணவி நேத்ரா தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 588

    0

    0