ஆளுநரிடம் விஜய் வைத்த 3 முக்கிய கோரிக்கைகள்.. பாராட்டிய அண்ணாமலை!

Author: Hariharasudhan
30 December 2024, 2:26 pm

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை, ஆளுநரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அளித்துள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அளித்த மனுவில், “இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில் ஆளுநர் திரு. ஆர்.என்.ரவியைச் சந்தித்து மனு அளித்தோம்.

எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

Vijay meets rn Ravi

இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்” எனத் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, இன்று பிற்பகல் 1 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் வைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் பொருளாளர் வெங்கடராமன் ஆகியோர் இணைந்து இந்த கோரிக்கை மனுவை அளித்தனர்.

இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ” அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் விஜய் அவர்களும், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம்.வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்து உள்ளார்.

  • TTF Vasan snake video controversy பாம்பு மட்டும் தானா…TTF வாசன் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை..!
  • Views: - 99

    0

    0

    Leave a Reply