மதுரை வருமானவரித்துறை சார்பில் வருமானவரி செலுத்துபவர்கள் வருமாவரித்துறை தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ளும்வகையில் மதுரை தமுக்கம் மைதான அரங்கில் TAXPAYERS HUB என்ற நிகழ்ச்சி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான தொடக்கவிழா நிகழ்ச்சியினை நடிகர் விஜய்சேதுபதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி : நானும் சில ஆடிட்டர்ஸ் அலுவலகத்தில் வேலைபார்த்திருக்கிறேன், வருமானவரித்துறை செலுத்துபவர்கள் வருமானவரித்துறை தொடர்பாக தகவல்கள் குறித்து தெரிந்துகொள்ள யாரை பார்ப்பது என்ற நிலை இருந்தது.
இதையும் படியுங்க: பெண்களுக்கு எதிராக குற்றம் செய்ய திமுக கொடிதான் லைசன்சா? எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இப்போது எளிமையாக தெரிந்துகொள்ளும் வகையில் எல்லோருக்கும் புரியும் வகையில் இதுபோன்ற இணையதளம் தொடங்கியுள்ளது வரவேற்பு அளிக்கும் வகையில் உள்ளது.
அதிலும் கார்டூன் வடிவில் கொடுத்துள்ளது எளிமையாக சுவாரஸ்யமானது புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது.
பான்கார்டு அப்ளை பண்ண வேண்டுமானால் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் உள்ளது. இதை நிறைய பேருக்கும் மீண்டும் கடினமாக இருக்கும் தமிழிலும் இருந்தால் அது பார்த்தவுடன் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் நீங்க இதை தொடங்குவதே இது எளிமையாக செல்ல வேண்டும என்ற முயற்சிதான், பிரச்சனை வரும்போது அதுபற்றி முன்னதாகவே விளக்கமும் தெளிவும் வேண்டும்அது நமக்கு புரியும் மொழியில் இருந்தால் தான் தெளிவாக இருக்கமுடியும், இல்லையெனில் மறுபடியும் ஒருத்தரை சார்ந்து இருக்க கூடிய நிலை உருவாகும்.
வருமானவரித்துறையினர் இந்த முயற்சி அற்புதமானது. வருமானவரி செலுத்துவது நமது கடமை அவசியம், நமது உரிமைக்காக அரசிடம் கோரிக்கை வைக்கிறமோ அதே அளவு வரி செலுத்துவது கடமை, ரொம்பநாள் மனதில் உள்ள விஷயம் இதை சொல்கிறேன் :
கஷ்டபட்டு சம்பாதித்து வரி கட்டுறோம், ஒருகாலத்தில் நல்லா சம்பாதிப்போம், ஒரு காலத்தில் வருமானம் இல்லாமல் போவோம் அப்போது வரிசெலுத்துபவர்களுக்கு சில பயன்கள் கிடைக்க வருமானவரித்துறையினர் வழிவகை செய்ய வேண்டும், தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.