விஜய்சேதுபதி படத்தில் நடித்த மூதாட்டி கட்டையால் அடித்துக்கொலை… மூத்த மகனை கைது செய்து போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
5 February 2024, 2:10 pm

மதுரை ; விஜய் சேதுபதி படத்தில் நடித்து பிரபலமான மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இந்த படத்தில் நடித்த நல்லாண்டிக்கு தங்கையாகவும், விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்து பிரபலமானாவர் காசம்மாள்.

இவர் உசிலம்பட்டி அருகே உள்ள உள்ள ஆனையூரைச் சேர்ந்த விவசாய தொழிலாளி ஆவார். 71 வயதான இவருடன் மூத்த மகன் நமகோடி வசித்து வந்தார். மனைவியுடன் ஏறபட்ட கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளாக தாயுடன் வசித்து வந்தார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயை எழுப்பி, மது அருந்துவதற்கான பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் தர மறுத்த நிலையில், கோபமடைந்த நமகோடி தாயை கட்டையால் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த காசம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நமகோடியை கைது செய்தனர்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!