காருக்குள் கசமுசா செய்தாரா விஜய்? அந்தரங்க வாழ்க்கை குறித்து வெளியான வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2022, 1:58 pm

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ஹீரோ விஜய் தேவரகொண்டா லிகர் படத்தில் நடித்துள்ளார். அவரது ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். இந்த படத்தில் உலக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார்.

ஒரு டீக்கடை வியாபாரியாக இருந்து இந்திய பாக்ஸராக எம்.எம்.ஏ பட்டத்தை எப்படி வெல்கிறார் என்பதே இந்த படத்தின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ளது.

முன்னதாக இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஜய் தேவரகொண்டா மிகவும் சாதரணமாக உடையணிந்து, சாதா செருப்புகள் அணிந்து வருகை கொடுத்திருந்தார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா ,அனன்யா பாண்டே கலந்து கொண்ட காபி வித் கரன் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருக்கும் கரண் ஜோகரின், காபி வித் கரண் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். சமீபத்தில் சமந்தா,அக்‌ஷய் குமார் கலந்து கொண்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

தற்போது விஜய் தேவரகொண்டா பங்கேற்ற நிகழ்ச்சியின் ப்ரோமொ வெளியானது. அதில் கடைசியாக எப்போது உடலுறவு கொண்டீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கரண் கேட்கிறார். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளிக்கும் விஜய் தேவார கொண்டா இது வேண்டாம் என பதிலளிக்கிறார்.

இறுதியில் கார் என்கிறார் நாயகன். அதற்கு காருக்குள் மூவருமா கேள்வி எழுப்புகிறார் கரண். இல்லை என மறுப்புரைக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால் இந்த வீடியோ முழுவதும் வெளியானால்தான் அதற்கான விபரம் தெரியவரும்.

நிகழ்ச்சியின் டிஆர்பி எகிற வைக்க இதுபோன்ற ப்ரோமா வெளியானதா இல்லையான என்பது முழு வீடியோ வெளியான பின்பே தெரியவரும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1021

    1

    1