நடிகர் சூர்யா வணங்கான், வாடிவாசல் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார்.
வணங்கான் இயக்குனர் பாலாவின் திரைப்படம் ஆகும். இதை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டேர்டைன்மெண்ட் தான் தயாரிக்கிறது. வாடிவாசல் திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க கலைப்புலி S.தாணு தயாரிக்கிறார்.
சூர்யாவை பொறுத்தவரை அதிகமாக எந்த வம்பிலும் சிக்கி கொள்ளாதவர். அவரை பற்றி பொதுவாக எந்த கிசுகிசுக்களும் வராது. சக மனிதர்களுக்கு அதிகமாக மரியாதை கொடுப்பவர்.
மேலும் எந்த நடிகர்களிடமும் போட்டி, பொறாமை என்று வீண் வம்புகளில் சிக்கியது இல்லை. இது நாள் வரைக்கும் அவருடைய ரசிகர்களும் அதை தான் மெயின்டெய்ன் செய்து வந்தார்கள்.
சமூக வலைத்தளங்களை பொறுத்தவரை நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் பிரச்சனைகள் தான் எப்போதுமே ஒரு பஞ்சாயத்தாக இருக்கும்.
இவர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டால் எந்த லெவெலுக்கு வேணும் என்றாலும் சென்று ட்ரோல் செய்வார்கள். திடீரென்று எதாவது ஒரு ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள்.
இப்போது இந்த பஞ்சாயத்தில் புதிதாக தலைகாட்டுபவர்கள் சூர்யா ரசிகர்கள். இவர்கள் ஆரம்பத்தில் சூர்யாவை சப்போர்ட் செய்து கொண்டு தங்கள் போக்கில் இருந்தார்கள்.
இவர்களை வம்புக்கு இழுத்தது அஜித், விஜய் ரசிகர்கள் தான். சூர்யாவுக்கு ஒரு சில பிளாப் படங்கள் வரும் போது டிவிட்டரில் சூர்யா ரசிகர்களை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
இப்போது சூர்யாவுக்கு அடுத்தடுத்து வெற்றி படங்கள் அமைய சூர்யா ரசிகர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்களை துவம்சம் செய்து வருகின்றனர் என்றே சொல்லலாம்.
இயக்குனர் அட்லீயின் ஜவான் படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோல் செய்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது அதை சூர்யாவின் ரோலெக்ஸ் கேமியோ ரோலுடன் கம்பேர் செய்து ட்ரோல் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர்.
நேற்று அட்லீ, ஷாருகான், விஜய் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் அட்லீ சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்த கொஞ்ச நேரத்தில் #CameoBeggarVijay என்ற ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து விட்டனர். அஜித் ரசிகர்களுக்கு கேட்கவே வேண்டாம் இது தான் வாய்ப்பு என்று அவர்களும் இதில் சேர்ந்து விட்டார்கள்.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.