Get out பதாகை.. பிரமாண்ட விருந்து.. புதிய அறிவிப்புகள்.. தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவின் Highlights!

Author: Hariharasudhan
26 February 2025, 9:56 am

தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

சென்னை: நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். அதன் பின்னர், கட்சிக் கொடி, பாடல் என ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்த அவர், அக்டோபரில் முதல் மாநில மாநாட்டைக் கூட்டி, கொள்கைகள், செயல்திட்டங்களை வெளியிட்டார்.

இந்த நிலையில், தவெக தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் நுழைவதைக் கொண்டாடும் விதமாக, தவெக ஆண்டு விழா நிகழ்ச்சி, மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் உள்ள பூஞ்சேரி கிராம நட்சத்திர ரிசார்டில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் என நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது பொதுக்குழு கைவிடப்பட்டுள்ளது.

இதனால், ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் பிற்பகல்1 மணி வரை நடைபெற உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சுமார் 2,500 பேர் மட்டுமே பங்கு பெற உள்ளனர்.

TVK Vijay

சில கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தவெக தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

மேலும், விழாவையொட்டி, வழியெங்கும் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் மத்திய, மாநில அரசுக்கு எதிரான விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தையும் தவெக தொடங்க உள்ளது. இதற்காக வைக்கப்பட்டுள்ள பேனரிலும் மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்து வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: குருட்டுப் பூனை.. Mental Checkup.. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை!

மொத்தம் 6 வாக்கியங்களுடன் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து GET OUT என்கிற ஹேஷ்டேக்கும் இடம்பெற்றுள்ளது. அதில், “ஒருவர் பாட்டுப்பாட, மற்றொருவர் ஒத்திசையுடன் நடனமாட திரைமறைவு கூட்டு களவாணிகள் இருவரும் தமிழக மக்களின் பிரச்னைகளை இருட்டடிப்பு செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்கின்றனர்.

புதிய கல்விக் கொள்கை, மும்மொழி திட்டத் திணிப்போடு சேர்த்து முக்கிய அவலங்களையும் எதிர்த்துப் போராடி இவைகளை #GETOUT செய்திட உறுதியேற்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக,

பெண்கள் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எதிராக நடந்து வரும் பெரும் துயரைக் கண்டும், காணாத பொறுப்பற்ற தன்மை.

ஒரு சிலரின் பேராசை பசிக்காக நடக்கும் திட்டமிடப்பட்ட உழைப்பு சுரண்டலும், இயற்கை வளச் சுரண்டலும்.

விமர்சனத்துக்கு அஞ்சி கொடுங்கோலுடன் மக்களின் குரலை ஒடுக்கும் கோழைத்தனம்.

வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகம்.

ஆடம்பரம் மற்றும் ஆட்சியின் அவலத்தை மடைமாற்றம் செய்வதையே நம்பி வாழும் திறனற்ற நிர்வாகம்..சாமானியர்களுக்கு எதிராக வன்முறைகளை அரசியல் நோக்கோடு ஊக்குவிக்கும் வகையில் செயலற்று இருப்பது” ஆகியவை இடம்பெற்றுள்ளன.

  • Sun TV Serial வந்த வேகத்தில் ஜாக்பாட்… ஒரே சீரியலால் அத்தனை நடிகைகளையும் ஓரங்கட்டிய பிரபலம்!
  • Leave a Reply