Categories: தமிழகம்

தூத்துக்குடியை குறி வைக்கும் விஜய்.. இதுக்கு பின்னால் இவ்ளோ சீக்ரெட்ஸ் இருக்கா? முதல் மாநாடு நடக்கும் மாவட்டம் தெரியுமா?!

தூத்துக்குடியை குறி வைக்கும் விஜய்.. இதுக்கு பின்னால் இவ்ளோ சீக்ரெட்ஸ் இருக்கா? முதல் மாநாடு நடக்கும் மாவட்டம் தெரியுமா?!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாகவே அரசியலில் நுழைவார் என்ற பேச்சு அடிப்பட்ட போது அவர் இதை மறுக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர் தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சி பெயரை பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் தமிழ்நாட்டில் எகிறி வருகிறது.

நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளின் லிஸ்ட் விஜய் மேஜையில் இருப்பதாகவும் சாதக, பாதகங்களை ஆராய்ந்து அவர் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் இன்னும் நாட்களை கழிக்காமல் சூட்டோடு சூடாக உடனே இப்போதே அரசியலுக்கு வர வேண்டும் என அவரது நலன் விரும்பியாக அறியப்படும் பழ.கருப்பையா வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கது.

இதனால் எப்படி பார்த்தாலும் இன்னும் 6 மாதங்களில் விஜய் கள அரசியலுக்கு வந்துவிடுவார், மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இப்போதே அவரவர் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு விஜயின் வருகையால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் எனத் தெரிகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஜெயலலிதாவுக்கு எதிராக பேச காரணம் என்ன? 30 ஆண்டுகளுக்கு பின் காரணத்தை கூறிய ரஜினிகாந்த்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவை எதிர்த்து ரஜினிகாந்த் 1995ல் அனல் பறக்க பேசியது யாரும் மறக்க முடியாது. வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி…

10 minutes ago

பவன் கல்யாண் செய்த காரியத்தால் தேர்வை தவறவிட்ட மாணவர்கள்… பெற்றோர் கண்ணீர்!

ஆந்திர துணை முதல்வர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை…

43 minutes ago

19 வயது இளம்பெண்ணை சீரழித்த 23 பேர் : 7 நாட்களாக நடந்த கூட்டுப்பாலியல் பலாத்காரம்!

19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து. உத்தரபிரதேச மாநிலம்…

1 hour ago

சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?

வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…

1 hour ago

தனியாக இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை.. பனியன் தொழிலாளர்களுக்கு காத்திருந்த ஷாக்!

திருப்பூர் கோவில்வழியை சேர்ந்தவர்கள் பாபு(வயது 47), இளையராஜா(38). பனியன் நிறுவன தொழிலாளர்கள். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15…

2 hours ago

தமிழ் மட்டுமே உயிர் மூச்சு… காமராஜரின் தொண்டன் : கடைசி வரை கட்சி மாறாத குமரி அனந்தன்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…

4 hours ago

This website uses cookies.