Bigg Boss 6: என்ன இப்படி ஆயிடுச்சு.. அப்போ அவங்க வரமாட்டாங்களா? அப்செட்டில் ஃபேன்ஸ்..!
Author: Vignesh28 September 2022, 1:10 pm
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரபலம் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டார் என பரவி வரும் தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பரபரப்புக்கும் பஞ்சாயத்துக்களுக்கும் பஞ்சம் இல்லாத இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபலங்கள் பலரும் யோசித்ததாக கூறப்பட்டது.
அதேநேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்கள்தான் என உத்தேசப் பட்டியலும் கடந்த 3 மாதங்களாக வெளியாகி வந்தது. அந்த வகையில் விஜய் டிவியின் ஆஸ்தான விஜேக்களில் ஒருவரான டிடியின் பெயர் ஆரம்பத்தில் இருந்தே அடிப்பட்டு வந்தது.

தொகுப்பாளரான டிடி, தான் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் சரி பொது நிகழ்ச்சிகளையும் சரி கலகலப்பாகவும் சுவாரசியமாகவும் கொண்டு செல்வார். இதனாலேயே அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அதோடு சினிமா பிரபலங்கள் பலரும் டிடிக்கு ரசிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் டிடி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்ற தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே முடக்கு வாத பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார் டிடி. இதனால் நடப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற காஃபி வித் காதல் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் கூட வீல் சேரில் தான் வந்தார் டிடி.
இப்படி இருக்கும் போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் அவரால் அவருடைய வேலைகளை தனியாக செய்து கொள்ள முடியாது. அவருக்கு உதவிக்கு என ஒரு ஆள் தேவைப்படும். இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. இந்த தகவலால் டிடியின் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.