என் போட்டோவா ஆபாசமாக சித்தரிச்சு என்னோட Contact எல்லாருக்கும் அனுப்பறாங்க: முத்தழகு சீரியல் நடிகை கண்ணீர்..!

Author: Vignesh
26 September 2022, 4:18 pm

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பாப்புலர் ஆனவர் லட்சுமி வாசுதேவன். லட்சுமி தற்போது முத்தழகு என்ற தொடரில் நடித்து வருகிறார். அதில் அவர் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை லட்சுமி வாசுதேவன் தனது வாட்சப் காண்டாக்ட்களுக்கு தனது தவறான மார்பிங் போட்டோக்களை சிலர் அனுப்பி வருவதாக கண்ணீருடன் புகார் அளித்து இருக்கிறார்.

நடந்தது எப்படி?

“போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. 5 லட்சம் பர்சனல் லோன், கிப்ட் என எதோ அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை க்ளிக் செய்ததும் ஒரு ஆப் டவுன்லோட் ஆனது. அடுத்த நிமிடமே போன் ஹேக் ஆகிவிட்டது. “

“அதன் பின் 5000 லோன் வாங்கி இருக்கிறீர்கள் என சொல்லி மெசேஜ்கள் மற்றும் அழைப்புகள் வந்தது. அதனை தொடர்ந்து அது ஆபாச அழைப்புகளாக மாறியது. தற்போது என் காண்டாக்ட்களில் இருப்பவர்களுக்கு எனது தவறான மார்பிங் போட்டோக்களை அனுப்பி இருக்கிறார்கள், வேறொரு நம்பரில் இருந்து இதை செய்கிறார்கள்.”

“இது பற்றி சைபர் crimeல் புகார் அளித்து இருக்கிறேன். இது பற்றி மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் வீடியோ வெளியிடுகிறேன்” என அவர் தெரிவித்து இருக்கிறார்.

  • amazon prime bagged jana nayagan movie for 115 crores ஜனநாயகன் படம் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்? ஓபனாக உடைத்து பேசிய பத்திரிக்கையாளர்…