மேடையில் அசத்திய குக்வித்கோமாளி பிரபலம்.. இவ்ளோ அழகா பாடுறாரே.. Viral Video..!

Author: Rajesh
20 June 2022, 3:50 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘கலக்கப் போவது யாரு’, ‘அது இது எது’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், புகழ் தோன்றி இருந்தாலும், அதனை விட அவரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்த நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’ தான். அந்த சீசனில் கலக்கிய அஷ்வின், சிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் ஏராளமான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உருவாகி அவர்களின் நகைச்சுவைக் காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டன. இவர்கள் மூவருமே இப்போது சினிமாவில் கால்பதித்துள்ளனர்.

CWC பிரபலத்தின் மூலம் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் தோன்றி வந்த புகழ், புதிய திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் நாயகியாக ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை வரவேற்பையும் வாழ்த்துகளையும் குவித்தது. இந்த படத்தின் சில காட்சிகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் விரைவில் படமாக்கப்பட உள்ளன.

படத்தில் நடித்துவந்தாலும், அவ்வப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சிவாங்கியோடு இணைந்து இசைஞானி இளையராஜாவின் ஹிட் பாடலான ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது. மேலும் இந்த வீடியோவைப் பார்க்கும் ரசிகர்கள் புகழ் இவ்வளவு நன்றாக பாடுவாரா என்றும் ஆச்சர்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu