Y செக்யூரிட்டி பாதுகாப்புடன் முதல் முறையாக விஜய்.. விரைவில் தவெக பொதுக்குழு? எங்கு தெரியுமா?

Author: Hariharasudhan
15 February 2025, 6:44 pm

வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி சென்னையில் தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய், தனது புதமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் பின்னர், கடந்த ஆண்டில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.

தொடர்ந்து, கட்சி தொடங்கிய ஓராண்டை நிறைவு செய்யும் வகையில், சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றி கொண்டாடிய விஜய், கட்சி நிர்வாகிகளையும் நியமித்தார். அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராக புஸ்ஸி என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக, விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்புச் செயலாளராக ராஜ்மோகனும் நியமிக்கப்பட்டனர்.

TVK General Meeting

இந்த நிலையில் தான், தவெக பொதுக்குழுவை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதன்படி, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்குழு நடத்த தவெக நிர்வாகிகள் திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி நடத்த ஆட்சேபம் இல்லை என போலீசார் அளிக்கும் சான்றிதழை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்பதால், அந்த இடம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: காதலர் தினத்தில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் அர்ச்சனா…வைரலாகும் வீடியோ.!

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஓராண்டு நிறைவு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி, சென்னை ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள Confluence Convention Centreஇல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இடம் தேர்வு நடைபெற்றதாகவும், இந்த நிலையில் தற்போது இந்த இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!