அண்ணாமலைக்கு பதில் சொல்வாரா விஜய்? இன்னும் 8 நாட்கள் தான்.. தவெகவினர் தீவிரம்!

Author: Hariharasudhan
20 March 2025, 2:02 pm

தவெக பொதுக்குழுக் கூட்டம் மார்ச் 28ல் நடைபெற உள்ள நிலையில், அதில் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு விஜய் பதிலளிப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை: தவெக பொதுக் குழுக் கூட்டம் வருகிற மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எனவே, இக்கூட்டத்தில் விஜய் பேசுவாரா, அவ்வாறு பேசினால், சமீபத்தில் விஜயை கடுமையாக விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதில் அளிப்பாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுக் கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025 – வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற உள்ளது.

இதன்படி, வருகிற மார்ச் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் தவெக பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், பொதுக்க்ழு நடைபெறும் இடத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Annamalai Vs Vijay

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, பரந்தூரில் புதிதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களை அண்மையில் விஜய் சந்தித்தார்.

இதையும் படிங்க: தினந்தோறும் கொலை பட்டியல்.. சட்டப்பேரவைக்கு வெளியே வெளுத்துவாங்கிய இபிஎஸ்!

மேலும், தவெக கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தொடங்கியதால், 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததால், அதன் தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், 2ம் ஆண்டு துவக்க விழா செங்கல்பட்டு, மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற்றது. இதனிடையே, கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார். இதற்காக அக்கட்சி 120 மாவட்டங்களாக பிரித்துள்ளது.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…