மீள முடியாத சோகம்.. அந்த சம்பவத்தால் முற்றிலும் மாறிப் போன விஜய்.!
Author: Rajesh20 May 2022, 7:00 pm
தமிழ் சினிமாவில் தற்போது உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர்களின் ஒருவர் தான் விஜய். இவர் படம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படி இருக்கும். அதனால், இவர் நடிப்பில் சுமாராக இருந்த திரைப்படங்கள் கூட நல்ல வசூலை பெற்றுள்ளன.
வெளியில் இருந்து பார்க்கும் போது எவ்வளவு கலகலப்பாக தளபதி விஜய் தெரிகிறாரோ அந்தளவுக்கு அவர் அமைதியானவர். ஆனால் சிறு வயதில் இவரும் சுறுசுறுப்பாக கலகலப்பாக தான் இருந்தாராம். ஆனால் ஒரு சம்பவம் இவரை அப்படியே மாற்றிவிட்டதாம்.
அது இவரது தங்கை வித்யாவின் இறப்பு. சிறுவதிலேயே இதே தினத்தில் (மே-20)தான் விஜயின் உடன் பிறந்த தங்கை உயிரிழந்தாராம். அதன் காரணமாகவோ என்னவோ, திருப்பாச்சி, சிவகாசி, வேலாயுதம் போன்ற தங்கை செண்டிமெண்ட் படங்களில் விஜய் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தி இருப்பார். படமும் நல்ல வெற்றியை கொடுத்திருக்கும்.
இன்று விஜயின் தங்கை வித்யா இறந்த தினத்தை முன்னிட்டு விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் டிவிட்டரில் விஜய் மற்றும் விஜயின் தங்கை சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து எனது வாழ்வில் மறக்க முடியாத நாள் என பதிவிட்டுள்ளார்.
என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று மே-20 pic.twitter.com/MhWxvrpXRA
— S A Chandrasekhar (@Dir_SAC) May 20, 2022