2026ல் முதல்வர் விஜய் தான்.. உடனே களத்தில் குதிங்க : நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் போட்ட உத்தரவு..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2024, 11:52 am

2026ல் முதல்வர் விஜய் தான்.. உடனே களத்தில் குதிங்க : நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் போட்ட உத்தரவு..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாகவே அரசியலில் நுழைவார் என்ற பேச்சு அடிப்பட்ட போது அவர் இதை மறுக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர் தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சி பெயரை பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் வரும் 2026ல் ஆளும்கட்சியாக மாற வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் பல்வேறு அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளார்.

நேற்று இரவு 11 மணிக்க நடந்த கூட்டத்தில்,புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது, விஜய் மக்கள் இயக்கம் எப்படி செயல்பட்டதோ அதேபோல் தமிழக வெற்றி கழகமும் பொதுமக்களின் சேவையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகி, மாவட்ட செயலாளர்களும் எதற்கும் பயப்பட வேண்டாம். உங்கள் ஒவ்வொருவருக்குள் தலைவர் விஜய் இருக்கிறார். பொதுமக்களின் சேவைக்கு எது எதிராக வந்தாலும் அதை துடைத்து எரியுங்கள்.

விலையில்லா உணவகம், ரொட்டி பால் முட்டை திட்டம், தளபதி பயிலகம், நூலகம் என அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்பட வேண்டும். கட்சியின் பெயரை டெல்லியில் பதிவு செய்து வந்த நொடியே கட்சியின் பெயர் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. அதுதான் தலைவர் விஜயின் பலம். 2026 இல் தமிழக முதல்வர் யார் என்று பொதுமக்கள் தற்போது யோசித்து வருகின்றனர். எல்லோருடைய கருத்துக்கணிப்பில் 65 சதவீதம் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் இருக்கிறது. நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்க்க வேண்டும்.

கட்சியின் தலைவர் விரைவில் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி கொடி நிறங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்.இனிமேல் கட்சியின் முக்கிய தகவல்களை முழுவதும் தலைவர் தான் அறிவிப்பார். முதலில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளில் பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமங்களுக்கு சென்று அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.உங்கள் பணியை முடித்துவிட்டு தினந்தோறும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கட்சிக்காக உழைக்க வேண்டும்

2026 இல் தமிழகத்தின் முதல்வராக தலைவர் விஜய் யை உட்கார வைக்க வேண்டும். அதற்கான சேவைகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.தேர்தல் நேரத்தில் மட்டும் வைக்கக்கூடாது. தற்போது இருந்தே நாம் உழைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 320

    0

    0