விஜயதசமி நாளில் களைக்கட்டிய வித்யாரம்பம் : அகர எழுத்துகளை அரிசியில் எழுதி கல்வி போதித்த குழந்தைகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2022, 9:22 am

விஜயதசமியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் உள்ள சரஸ்வதி கோவிலில் சிறு குழந்தைகளுக்கு முதல் முதலாக கல்வி கற்கும் நிகழ்ச்சி துவக்கம்-இதில் ஏராளமான குழந்தைகளுக்கு நாக்கில் தங்க எழுத்தாணியால் எழுதி வித்யாரம்பம் ஆரம்பம்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த காலம் தொட்டு ஏடு துவக்கும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. கல்வி கடவுளான சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமியான அன்று இரண்டரை வயது முடிந்த குழந்தைகளுக்கு முதன் முதலாக கல்வி போதித்தால் அவர்கள் நன்றாக கல்வி பயின்று வாழ்க்கையில் உன்னத நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.

அதன்படி இன்று விஜயதசமி என்பதால் நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனமாலீஸ்வரர் கோவிலில் உள்ள சரஸ்வதி தேவி ஆலயத்தில் ஏராளமான குழந்தைகளுக்கு ஏடு எழுதப்பட்டது.

இதில் பச்சரிசியை தாம்பளத்தில் பரப்பி அதில் அகர எழுத்துக்களை எழுதியும் குழந்தையின் நாக்கில் தங்க எழுத்தாணியில் தேன் தடவி அகர எழுத்துக்களை எழுதியும் முதன்முதலாக கல்வி புகட்டப்பட்டது.

இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து ஏடு தொடங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏடு எழுத அழைத்து வந்தனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!