வாரி வழங்கிய ‘வல்லரசு’ விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்வது எங்கு தெரியுமா? நேரத்துடன் தேமுதிக வெளியிட்ட முக்கிய தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2023, 2:18 pm

வாரி வழங்கியல் வல்லரசு.. விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்வது எங்கு தெரியுமா? நேரத்துடன் தேமுதிக வெளியிட்ட முக்கிய தகவல்!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலை 6.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர். விஜய்காந்த் உடலுக்கு அரசு மரியாதை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிவித்து இருந்தார்.

அதன்படி, நாளை மாலை 4.30 மணியளவில், விஜயகாந்த் உடல் தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 478

    0

    0