சந்தன பேழையில் கமகமக்க துயில் கொண்டார் கேப்டன் – மனதை கனக்க செய்யும் வாசகம்!

Author: Rajesh
29 December 2023, 5:18 pm

நேற்று உடல்நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமான நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் , லட்சக்கணக்கான ரசிகர்கள், கோடிக்கணக்கான மக்கள் என பல ஆயிரம் பேர் சாலையெங்கும் தேங்கி நின்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

vijayakanth-death-2

சற்றுமுன் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் துவங்கியது. சென்னை தீவுத் திடலில் தொடங்கி பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி இறுதி பயணம் துவங்கியது. விஜயகாந்த் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில் விஜயகாந்த் மீளா துயில் கொள்ள பிரத்யேகமாக 50 கிலோ எடைகொண்ட சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு புறத்தில் ” கேப்டன்” என்றும் மறுபுறத்தில் “புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ நிறுவன தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் விஜயகாந்தின் பிறப்பு , இறப்பு தேதிகள் இடம்பெற்றுள்ளன.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்! 
  • Close menu