சுயநலம் இல்லாதவர் விஜயகாந்த்.. அவர் இல்லையென்றால் நான் தெருவுலதான் இருந்திருப்பேன் : பிரபல நடிகர் ஓபன் டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2022, 2:11 pm

நடிகர் விஜயகாந்த் தனது திரைவாழ்வில் பலரையும் தூக்கிவிட்டவர். இதில், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர், இயக்குனர்கள் என பலரும் அடக்கம். பலபேரை சினிமா கனவு உள்ளவர்களுக்க வாய்ப்பு வழங்கி பெருமைப்படுத்தியவர் விஜயகாந்த்.

இன்று வரை அவருக்கு நல்ல மனிதன் நல்ல குணம் கொண்டர்வர் என்ற பெயர் உள்ளது. மன்சூர் அலிகானின் வாழ்க்கையையே மாற்றியவர் விஜயகாந்த். டான்ஸ் குரூப்பில் ஆட வந்த மன்சூரை கேப்டன் பிரபாகரனில் வில்லனாக அறிமுகப்படுத்தினார்.

அப்படித்தான் நடிகர் சரத்குமாருக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தார். இந்த தகவலை சரத்குமாரே பல மேடைகளில் கூறியுள்ளார். விஜயகாந்த் சினிமா துறையில் தனது 40வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். எனவே, அவருக்கு சமீபத்தில் ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகரும், சமத்துவமக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:

நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணமே கேப்டன் விஜயகாந்துதான். ஒரு நல்ல மனிதருக்காக இங்கே வந்துள்ளேன். அவர்தான் என் வாழ்வை மாற்றினார். அவரை போன்ற ஒரு நல்ல மனிதரை பார்க்கவே முடியாது.

நான் சினிமா துறையில் நுழைந்து நஷ்டப்பட்டு எல்லாவற்றையும் இழந்து நின்றேன். வெறும் கையோடு மவுண்ட் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, மேக்கப் மேன் ராஜூ என்பவரை ராஜாபாதர் தெருவுக்கு என்னை அழைத்து சென்று விஜயகாந்தை சந்திக்க வைத்தார்.

அப்போது செல்வமணி இயக்கத்தில் புலன் விசாரணை படத்தில் அவர் நடித்து கொண்டிருந்தார். அப்படத்தில் எனக்கு வில்லன் வேடம் கொடுத்தார். மேலும், இந்த படத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என தெரிவித்தார்.

யார் இப்படி எல்லாம் செய்வார்கள்?..விஜயகாந்த சுயநலம் இல்லாத ஒரு மனிதர் ஆவார். நல்ல மனிதரால் மட்டுமே வில்லனாக நடிக்க வந்தவனுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க முடியும்’ என சரத்குமார் தெரிவித்தார்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 888

    6

    1