அந்தரத்தில் விஜயகாந்த்.. டூப் போடாமல் நடித்த விஜயகாந்தின் வீடியோவை வெளியிட்ட ஏ.வி.எம்.!

Author: Rajesh
30 June 2022, 5:38 pm

தமிழ் சினிமாவில் கதாநாயக பிம்பத்தை உடைத்த வெகு சில நடிகர்களில் விஜயகாந்த் மிக முக்கியமானவர். 1979ஆம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் விஜயகாந்த். ஆரம்ப காலங்களில் திரையுலகில் நிலைக்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.

1981ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ விஜயகாந்தின் திரைப்பயணத்தை மாற்றியது. விஜயகாந்த் தயாரிப்பாளர்களின் கவனத்தைப் பெறத் தொடங்கினார்.

சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்த பலருக்கு வாய்ப்பளித்தவர் விஜயகாந்த். அவர் கதாநாயகனாக உருவெடுக்கத் தொடங்கிய காலம், சில நடிகைகள் அவர் நிறத்தையும் உருவத்தையும் காரணம்காட்டி உடன் நடிக்க மறுத்த கதையெல்லாம் உண்டு. விஜயகாந்த் முன்னணி கதாநாயகனாக மாறிய பின் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் கேட்டிருக்கிறார், அப்படியெல்லாம் சொல்வேனா ’விஜி’ என அவர்களும் சமாளித்திருக்கிறார்கள். யார் மீதும் பகையுணர்வற்று தன் திரைப்பயணத்தைத் தொடர்ந்தார்.

ஓயாமல் நடித்த விஜயகாந்த், சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பதில் வல்லவர். அந்த வகையில் ஏவிஎம் தயாரிப்பாளர்களின் ஒருவரான அருணா குகன் அவரது ட்டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். சேதுபதி படத்தில் டூப் போடாமல் நடித்த விஜயகாந்தின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில வைரலாகியுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!