விஜயகாந்த் முதலமைச்சராக இருந்திருக்க வேண்டியவர்.. கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் சிவக்குமார் உருக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2024, 11:34 am

விஜயகாந்த் முதலமைச்சராக இருந்திருக்க வேண்டியவர்.. கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் சிவக்குமார் உருக்கம்!

விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய நடிகர் சிவக்குமார்” இந்த மண் இருக்கும் வரை கேப்டன் விஜயகாந்த்தை யாரும் மறக்க மாட்டோம். வருங்காலத்தில் முதலமைச்சர் ஆகவேண்டிய ஒரு நபர். ஆனால், இன்று விஜயகாந்த் நம்முடன் இல்லை. புதுயுகம் படத்தில் நானும் விஜயகாந்துடன் நடித்தேன்.

கேப்டன் விஜயகாந்த் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் ஒரு விஷயம் என்னவென்றால், 1996 ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி கலைஞர் அவர்களுக்கு ஒரு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சி யாருமே நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை விஜயகாந்த் மட்டுமே தனியாக நின்று செலவு செய்து நடத்தினார்.

அந்த விழாவிற்கு பிறகு அடுத்த தேர்தலில் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் ஆனார். விஜயகாந்த் நடிகர் சங்கத்திற்கு தலைவர் ஆன பிறகு லட்ச கணக்கில் கடன் இருந்தது. கமல் ரஜினி எல்லாம் அந்த சமயம் உயரத்தில் இருந்தார்கள். அவர்களுடைய உயரத்திற்கு விஜயகாந்தும் வளர்ந்தார்.

ஆனால், மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடைய வீட்டிற்கு சென்று மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். கடன்கள் பலவற்றையும் அடைத்தார். இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர் நம்மலுடன் இல்லாதது வேதனை” எனவும் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

  • dhanush was the first actor who acted in six pack சூர்யாவுக்கு முன்னாடியே அவர் சிக்ஸ் பேக் வச்சிந்தார்- சிவகுமாருக்கு பதிலடி கொடுத்த விஷால்?