கோட் படத்தில் மாஸ் காட்டிய விஜயகாந்த் என்ட்ரி.. இணையத்தில் லீக்கான காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan5 September 2024, 7:03 pm
ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்டம் தி கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா என ஏரளாமான நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க, யுவன் இசையமைத்திருக்கிறார்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் வெளியான முதல் திரைப்படம், அடுத்தபடம் தான் கடைசி என அறிவித்த நிலையில் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கூடியது.
இன்று காலை வெளியானதும் படத்திற்கு ஒரு பக்கம் நல்ல விமர்சனம் வந்தாலும், சிலர் எல்லா படமும் ஒன்று சேர்த்த கலவை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது
ஆனால் படத்திற்கு எந்த குறையும் இல்லாமல், கூட்டம் அலைமோதுவதால், அடுத்தடுத்து விடுமுறை தினம் என்பதாலும் படத்திற்கு வசூல் எகிறும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிலையில் படத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் விஜயகாந்த் உள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை படக்குழு அண்மையில் சந்தித்த புகைப்படங்களும் வைரலானது. இந்த நிலையில் விஜயகாந்த் என்ட்ரி கொடுத்த காட்சிகள் இணையத்தில் லீக்காகியுள்ளன.
மாஸ் என்ட்ரியுடன் விஜயகாந்த் வரும் காட்சிகளும், பின்னணயில் WE Miss u Captain என்ற வரிகளும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.