நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு தேமுதிக கடிதம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2023, 4:32 pm

நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு தேமுதிக கடிதம்!

தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலை காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

பின்னர் கூட்ட நெரிசல் காரணமாக சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது.நேற்று தீவுத்திடலில் இருந்து மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்னர் மாலை தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடம் விஜயகாந்த் நினைவிடமாக மாற்றம் செய்யப்படும் வேளைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை பொதுமக்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை உறுதி செய்த தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ், நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வலியுறுத்த உள்ளதாக தமிழக அரசிடம் கடிதம் கொடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!