மீண்டும் மீண்டும் சீண்டும் விஜயலட்சுமி… தற்கொலை மிரட்டல் : நாம் தமிழர் கட்சி எடுத்த அதிரடி முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan24 September 2023, 2:16 pm
மீண்டும் மீண்டும் சீண்டும் விஜயலட்சுமி… தற்கொலை மிரட்டல் : நாம் தமிழர் கட்சி எடுத்த அதிரடி முடிவு!!
தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டல் விடுத்த நடிகை விஜயலட்சுமி மீது, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சீமான் தரப்பில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தற்போது பெங்களுரில் வசித்து வரும் முன்னால் நடிகையான விஜயலட்சுமி, சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு உண்மைக்கு மாறான பொய்யான குற்றச்சாட்டுகளோடு ஒரு புகார் கொடுத்து, பின்னர், அந்த புகாரை 2012 ஆம் ஆண்டு திரும்பப்பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், விஜயலட்சுமி கடந்த 12 ஆண்டுகள் பின்னர், எங்கள் கட்சி மற்றும் எங்கள் கட்சித் தலைவர் சீமானுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் விஜயலட்சுமி என்ற பெண்ணும் கூட்டுச்சதியில் ஈடுபட்டு, சீமான் மீது முந்தைய புகாரில் இல்லாததும், கூடுதல் பொய்யான குற்றச்சாட்டுகளோடு, கடந்த மாதம் 28ம் தேதி காவல் ஆணையரிடம் புதிய புகார் அளித்துள்ளார்.
எங்கள் கட்சி தலைவர் சீமானிடம் இருட்னது பணம் பறிக்க வேண்டும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டுமென்று கெட்ட நோக்கங்களோடு, கடந்த ஒரு மாதமாக செயப்படு வரும் நிலையில், விஜயலட்சுமி திட்டம் நிறைவேறாதவாத அறிந்து, புகாரைக் கடந்த 15 ஆம் தேதி மீண்டும் விஜயலட்சுமி திரும்பப்பெற்றாகொண்டு பெங்களூரு சென்றுவிட்டார்.
மேலும், விஜயலட்சுமி தனது வாழ்க்கையில், தமிழ்நாட்டில் பல நபர்கள் மீது, அவதூறு குற்றச்சாட்டுக்களைக் கூறி தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டி, பலமுற தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
தற்போது, பொய்யான குற்றச்சாட்டுக்களோடு அவதூறை பரப்பி, நானும் தன் அக்காவும் உயிரை மாய்த்துக்கொள்வோம் என்று கூறி, சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும் கானொளி மூளமாக மிரட்டல் விடுத்துவருகிறார். இதனால், விஜயலட்சுமி மீது நகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.