நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் புதிய கட்சியின் துவங்கி அரசியல் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமைச் செயலகத்தில் கட்சி கொடியை இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் பின்னர் கொடி கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்த நடிகர் விஜய் உறுதிமொழி ஏற்று கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். இன்று காலை 9:15 மணிக்கு உறுதிமொழி எடுத்த பின்னர் கட்சி கொடி அறிமுகம் செய்து வைத்தார் விஜய். அதன் பிறகு கொடிக்கம்பத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த கொடியை ஏற்றினார்.
கொடியில் சிகப்பு, மஞ்சள் என இரண்டு வண்ணங்களுக்கு மத்தியில் இரண்டு போர் யானைகள் பிளிறும் வகையில் இடம் பெற்றுள்ளது. அத்துடன் வாகை மலருடன் இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடியேற்று நிகழ்வின் போது “தமிழன் கொடி பறக்குது…. தலைவன் யுகம் பிறக்குது” என்ற பாடல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய்யின் தாய் தந்தையான சோபா மற்றும் சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மேடையேறி பேசி முடிந்ததும் மேடை விட்டு கீழே இறங்கும்போது கடைசியா ஒன்னு சொல்ல மறந்துட்டேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னுடைய அப்பா, அம்மா இரண்டு பேருக்குமே ரொம்ப நன்றி தேங்க்ஸ் பா… தேங்க்ஸ் மா என சொல்லிவிட்டு இறங்கினார்.
மகன் விஜய்யின் வாயால் இந்த வார்த்தைகளை கேட்ட ஷோபா சந்திரசேகர் உடனே ஆனந்த கண்ணீர் விட்டார். கீழே இருக்கையில் அமர்ந்துகொண்டிருந்த ஷோபா இதை கேட்டதும் மிகுந்த நிகழ்ச்சியோடு சிரித்து அவருக்கு கை அசைத்தார்.
விஜய்க்கும் அவரது தாய் தந்தைக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சனை நிலவி வருவதாக செய்திகள் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது விஜய்யின் இந்த பேச்சு அது அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இருந்தாலும் விஜய்யின் மனைவி பிள்ளைகள் ஏன் இந்த முக்கிய நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை? என்பது கேள்விக்குறியாகி விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.