கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க விஜய் போட்ட மாஸ்டர் பிளான்.. அடுத்த வாரம் வெளியாகும் அறிவிப்பு : த.வெ.கவினர் குஷி!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2024, 1:46 pm
கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க விஜய் போட்ட மாஸ்டர் பிளான்.. அடுத்த வாரம் வெளியாகும் அறிவிப்பு : த.வெ.கவினர் குஷி!
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டர்.
இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தலைவர் விஜயின் உத்தரவின் பேரில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகளை வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும், அந்த உறுப்பினர் சேர்க்கைக்கென செயலி மூலம் ஒவ்வொருவரும் தங்களுக்கான எண் மூலம் உறுப்பினரை சேர்க்கலாம் எனவும் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.