விஜய் நடத்திய ரோடு ஷோ… கேரவன் மீது ஏறிய தொண்டர்கள் : ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2025, 12:24 pm

கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படியுங்க: கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு வியூக பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று மற்றும் நாளை பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

கோவை எஸ்என்எஸ் கல்லூரியில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்ட நிர்வாகிகள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

இதற்காக விஜய் இன்று காலையில் சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் வருகை தந்தார். கோவை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பை தொண்டர்கள் கொடுத்தனர்.

முக்கியமாக, கோவை விமான நிலையத்திற்கு விஜய் வருவதை எதிர்பார்த்து தொண்டர்கள் ஏராளமானோர் காத்திருந்தனர். கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியதால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். விஜய் பிரச்சார வாகனத்தில் ஏறி ரோடு ஷோ நடத்தினார். தொண்டர்கள் மத்தியில் வாகனம் மெதுவாக ஊர்ந்தது.

விஜய்யின் பிரச்சார வாகனம் மீது தாவி ஏறிய தொண்டர்கள், விஜய்க்கு கைக்கொடுத்தனர். ஷாக் ஆன விஜய், அவர்களுக்கு கையை காட்டி கீழே இறங்க சொன்னார். பாதுகாவலர்கள் அவர்களை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!
  • Leave a Reply