KGF தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்ட படத்தில் கைகோர்க்கும் விக்ரம் பட நடிகர்..! ஹீரோயின் யார் தெரியுமா..? சுட சுட வெளியான தகவல்..!

Author: Vignesh
30 September 2022, 3:00 pm

பிரசாந்த் நீல் இயக்கிய கே.ஜி.எஃப் மற்றும் பிரபாஸின் சலார் போன்ற படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. அந்நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான கே.ஜி.எஃப் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து அதைவிட பிரம்மாண்டமாக அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளிட்டு வெற்றிகண்டனர். விரைவில் கே.ஜி.எஃப் 3-ம் பாகத்தையும் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது பிரபாஸின் சலார் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கே.ஜி.எஃப் படத்தில் பணியாற்றிய டெக்னிக்கல் டீம் தான் இப்படத்திலும் பணியாற்றி வருகிறது.

இந்நிலையில், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அந்நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்திற்கு தூமம் என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று பட நாயகி அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பவண் குமார் இயக்க உள்ளார். இவர் யு டர்ன், லூசியா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் 9-ந் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியிட உள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 549

    0

    0