சாண்டி மாஸ்டர் நீங்க கொஞ்சம் ஓரமா போங்க.. மேடையில் தனது பாணியில் கெத்து காட்டிய சிம்பு.!

Author: Rajesh
16 May 2022, 2:00 pm

கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனிருத் இசையில் 6 பாடல்கள் உருவாகியுள்ளன. இதில் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமலஹாசன், விஜய் சேதுபதி, சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படத்தின் பத்தல பாடலுக்காக நடன இயக்குநர் சாண்டி மாஸ்டருடன் இணைந்து மேடையில் சிம்பு நடனமாடினார். ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கைத்தட்டி மகிழ்ந்தனர். சாண்டி மாஸ்டர் எப்படி ஆட வேண்டும் என சொல்லிக் கொடுத்தார். அதற்கு சிம்பு தனது பாணியில் Extra step போட்டு, ரசிகர்களை ரசிக்க வைத்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1220

    5

    1