“ராக்கெட் வேகத்தில் உயரும் விக்ரம் மார்க்கெட்.” உண்மையை ஓபனாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின்.!

Author: Rajesh
18 June 2022, 2:03 pm

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, வெற்றிவிழா சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை பெற்ற உதயநிதி ஸ்டாலின் பேசியது ” இந்த படத்தை முதலில் பார்த்தவன் நான் தான். படத்தை பார்க்கும் போதே எனக்கு தெரியும் படம் ஹிட் ஆகும் என்று , ஆனால் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என எனக்கு தெரியாது. இந்த திரைப்படம் மூன்றாவது வரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆறு வாரம் வரை வெற்றிகரமாக ஓடும் என நினைக்கிறன்.

இதுவரை தமிழகத்தில் மட்டும் 75 கோடி ரூபாய் ஷேராக கிடைத்துள்ளது. கமல் சாரை வைத்து படம் பண்ண வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று எப்படியோ எதோ ஒரு படம் போல எடுக்கலாம் என்று எடுக்காமல், பொறுமையாக கமல் சாரின் உண்மையான தீவிர ரசிகனாக இருந்து நல்ல படம் கொடுத்ததற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அடுத்தப்படமும் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள். நான் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் “விக்ரம்” படத்தின் ரயிலில் கடைசியாக ஏறியவன் நான் என்று கூறினேன். என்னை மன்னித்துவிடுங்கள். “விக்ரம்” திரைப்படம் ரயில் அல்ல ராக்கெட் என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 610

    0

    0