நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிட கமல் முடிவு செய்துள்ளார். இதையொட்டி சமீபத்தில் இப்படத்தின் வட இந்திய விநியோக உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான பென் ஸ்டுடியோ பெற்றுள்ளது.
தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விக்ரம் படத்தை பிரபலப்படுத்தும் முயற்சியாக ரயில்பெட்டிகளிலும், முக்கிய இடங்களிலும் விக்ரம் படத்தின் போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியில் கபில் ஷர்மா தொகுத்து வழங்கும் புகழ்பெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல் கலந்துக் கொண்டுள்ளார். அதில் விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டார்.
ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்துள்ளார். கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. அதோடு ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் 125 கோடிக்கு கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.