Rolex வரும் சீன் Fire-னு காத்திருந்த ரசிகர்கள்… திரையில் நிஜமாகவே பற்றி எரிந்த நெருப்பு… அலறியடித்து ஓடிய மக்கள்..

Author: Babu Lakshmanan
8 June 2022, 12:40 pm

புதுச்சேரியில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டரின் திரையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு தியேட்டரைவிட்டு வெளியேறினர்.

புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் உள்ள ஜெயா திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது, திரையின் ஒரு பக்கத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலயறியடித்து கொண்டு தியேட்டரை விட்டு வேகமாக வெளியேறினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், திரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1112

    0

    0